பாடசாலை கீதம்

பல்லவி
வட இந்து மக்ளிர் கல்லூரி வாழிய வாழி நீடுழி - ( வட )

அனுபல்லவி
ஆழி இறைவன் அருள்நிதம் பாடி பாழ்வினை யகலப் பரிவுடன் பயிலும் - (வட )

சரணம்
ஈழநன் நாடாம் எங்கள் பொன்னாடில்திடுவளர்ந்தோடும் பருத்திதுறையாம்தாழ்விலாத் தளத்தில் தவநெறிச் சங்கம் தமிழ்மகள் மான்புறத் தரணியி லருளிய - (வட )

செந்தமிழ் முதலாஞ் சிறந்த நற்கலையும்சிந்தையை யேற்றும் நந்திருமறையும்எந்தத் துறையிலும் தேர்ந்திடப் பயிற்சி தந்திடும் தர்மம் தனதென்ச் சாற்றும் - (வட )

மங்கையர் பண்பும் இங்குநாம் பயின்று நங்குலம் தழைக்க நாடும் செழிக்கப் பொங்கிடும் அன்பும் மங்கிடா வீரமும் எங்கணும் சேவைகள் செய்திட வளரும் - (வட)

பன்னரும் பெருமைசேர் பரந்தநல் விண்ணே பரிதியும் மதியு மின்றேல் இருட்புண்ணேஅன்பெனும் நிலவைப் பொழிபவள் பெண்ணே இன்பக் கதிரொளி காட்டிடுங் கண்ணே நன்மணி விளக்கே மாற்றுயர் பொன்னே மண்ணுயர் சேவையை தன்னுயிரென்னும் - (வட )